ஹெல்மெட் இல்லாமல் பிடிபட்டவர்கள் 1.40 லட்சம் பேர் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளதாகவும், முழு அளவில் அமலாகாததால் நீதிபதி கடும் வேதனை என்றும் இன்றைய தினமலர் நாளிதழில் செய்தி வந்துள்ளது. அதே போன்று, ஹெல்மெட் அணிந்து எத்தனை வழிப்பறி கொள்ளை நடந்தது என்றும் அரசு தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற நீதிமன்ற உத்திரவினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஹெல்மெட் அணிவதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் நீதியரசர் கூறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஹெல்மெட் அணிந்து தான் இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டுமென்பதை குறை சொல்லவில்லை. எத்தனையோ வழக்குகள் நிலுவையில் இருக்கையில், இந்த புள்ளி விவர கணக்கில் கவனம் செலுத்துவதன் காரணம் தான் புரியவில்லை.
விபத்து என்பது எதிர்பாராமல் நடக்கும் அசம்பாவிதம். யாரும், வேண்டி வலிய சென்று விபத்தினை எதிர்கொள்வதில்லை. ஹெல்மெட் அணிவதால் விபத்துக்கள் முற்றிலும் தவிர்க்கப்படுவதில்லை. ஓரு நாளில் எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன ? அந்த விபத்துகளில் எத்தனை இரு சக்கர வாகன் விபத்துக்கள் ? அந்த இரு சக்கர வாகன் விபத்துகளில் எத்தனி நபர்கள் ஹெல்மெட் அணியாததால் பாதிக்கப்படுகின்றார்கள் ? இந்த புள்ளி விவரங்களை சேகரித்தால், நீதியரசர் குமாரசாமியின் கணக்குப்படி ஹெல்மெட் அணிய கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. கட்டாய ஹெல்மெட் உத்திரவினால் பயனடைவோர் ஹெல்மெட் தயாரிப்பாளர்கள், மற்றும் விற்பனையாளர்கள், காவல் துறையினர், இரு சக்கர வாகன பாதுகாவலர்கள் (ஹெல்மெட் பாதுகாக்க தனியாக கட்டணம்). சென்னை உயர் நீதிமன்றம் எதிரிலேயே, தமிழக அமைச்சர் ஒருவரின் மகன், வேகமாக சென்றதில், வேகத்தடை இருப்பதை அறியாமல் தவறி விழுந்து மரணமடைந்ததாக செய்தி. வேகமாக சென்றதும், ஹெல்மெட் அணியாமல் சென்றதும் அவரின் குற்றமேயாக இருந்தாலும், வேகத்தடை இருப்பதனை அடையாளம் காட்டும் பிரதிபலிப்பான்களை (Reflector) அமைக்காதது யார் குற்றம் ? தரமற்ற சாலைகளும், குண்டும் குழியுமான சாலைகளுக்கும் யார் காரணம் ?
சில வருடங்களுக்கு முன்பு, கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் கறுப்பு கண்ணாடி ஏற்றப்பட்ட வாகனங்களில் நடைபெறுகின்றது ஆகவே, வாகனங்களில், கறுப்புக்கண்ணாடி ஏற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதியரசர் உத்திரவிட்டார். அதே போன்று இன்னும் சில நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து, ஹெல்மெட் அணிந்து வழிப்பறி கொள்ளைகள், கொலைகள் அதிகம் நடைபெறுகின்றன என்று கூறி அதற்கும் தடை விதிக்கலாம். நமது நீதியரசர்கள் கற்றறிந்தவர்கள். காலத்திற்கேற்றவாறு நீதி வழங்குவதில் திறமையானவர்கள். இல்லாவிட்டால், கற்பழிப்பு வழக்கில் சமரசம் செய்து கொள்ளும்படி தீர்ப்பு வழங்கிவிட்டு பின்னர் அதனை திரும்ப பெற்றுக்கொள்வார்களா ? எனக்கே ஏற்பட்ட கசப்பான அனுபவம் என்னவென்றால், எனக்கு உரிமையான இல்லத்தினை, சில மோசடி நபர்கள், மோசடியாக விற்கிரயம் செய்ததனை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கு விசாரணைக்கு இன்னும் எடுக்கப்படாமல், 5 வருடங்களாக நிலுவையில் இருக்கையில், மோசடி நபர்களுடன் சமரசம் செய்து கொள்ளும்படி அழைப்பாணையினை சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது. எங்கே போய் முட்டிக்கொள்வதென்று தெரியவில்லை.
வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்தி :
டமிழ் நாட்டுல,
4042 நூலகங்கள் இருக்கு,6824 டாஸ்மாக் இருக்கு, நான் படிக்கவா?குடிக்கவா?
4042 நூலகங்கள் இருக்கு,6824 டாஸ்மாக் இருக்கு, நான் படிக்கவா?குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
காய்ச்சி விற்றால் கள்ள்சாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது டமிழ் நாடு...
குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
போதைல வண்டி ஒட்டுனா போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு அவமானம் மட்டுமே..!
போதைல வண்டி ஒட்டுனா போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு அவமானம் மட்டுமே..!
காலியான சாராய பாட்டில் சொல்கிறது..
இன்று உன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
இன்று உன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று மக்களின் மீது அன்பை பொழியும் அரசு அவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம் தட்டி கேட்காது.
குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும் கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம் தட்டி கேட்காது.
ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவது போல் நீதிமன்றம் இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.
மக்கள் மீது அக்கறை காட்டும் நீதிமன்றமே உன்களால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?